1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 16 டிசம்பர் 2021 (17:14 IST)

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ்: அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்பு உறுதி!

பெய்ஜிங்கில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவிப்பு. 

 
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம்.
 
ஆனால் சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை சுட்டிக் காட்டி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நிகழ்ச்சிக்கு தங்களின் அதிகாரிகளை அனுப்பாமல் புறக்கணிப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தன. இந்நிலையில் பெய்ஜிங்கில் வரும் 2022 ஆம் ஆண்டு நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். 
 
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் காணொளி அழைப்பு மூலம் பேசிய புதின், சர்வதேச விளையாட்டு கூட்டுறவு விவகாரத்தில், நாம் ஒருவருக்கொருவர் எப்போதும் ஆதரவு அளித்து கொள்வோம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்து தனது வருகையை உறுதி செய்துள்ளார்.