1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (14:44 IST)

’பியர் பாட்டில் ’- ஐ கொடுத்தால் சிரிக்கும் குழந்தை... வைரல் வீடியோ

உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரின் குழந்தை  அழுகும் போது, பியர் பாட்டிலை கொடுத்தால் சிரிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபரின்  குழந்தைக்கு ஒரு வயதிருக்கும் ., இப்போதுதான் வாயில் பால் பற்கள் முளைக்கத் தொடங்கி உள்ளன.
 
இந்நிலையில், அவரது குழந்தை தாயின் தோளில் சாய்ந்து கொண்டிருக்கும்போது, அழுதபடி இருந்தது. அதைப் பார்த்த தந்தை குழந்தைக்கு ஒரு  பியர் பாட்டிலைக் கையில் கொடுத்தார். அதைப் பெற்றதும் குழந்தை அழுகையை  நிறுத்தி சிரிக்கத் தொடங்கியது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
இருப்பினும்,இந்த வீடியோவைப் போன்று யாரும் செய்ய வேண்டாம் என நெட்டிசன்கள் விமர்சனம் எழுப்பி வருகின்றனர். அதே சமயம் இது ஆல்ஹலால் என குழந்தைக்கு தெரியாது எனவும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.