வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (16:08 IST)

இந்திய பிரதமர் மோடி தான் என்னுடைய பாஸ்: ஆஸ்திரேலிய பிரதமர்..!

இந்திய பிரதமர் மோடிதான் எனது பாஸ் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்ததால்  பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
 
பிரதமர் மோடி தற்போது ஜப்பான் மற்றும் நியூ கினியா நாட்டிற்கு பயணம் செய்துள்ள நிலையில் நேற்று இரவு ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றார். அவரை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானி என்பவர் வரவேற்ற நிலையில் இருவரும் சிட்னியில் நடந்த  பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
 
இந்திய பிரதமர் மோடி மேடை ஏறியதும் அங்கு கூடி இருந்தவர்கள் மோடி மோடி என கரகோஷமிட்டதால் அரங்கமே அதிர்ந்தது. அதை பார்த்து ஆஸ்திரேலிய பிரதமர் வியந்து போனார். இதனை அடுத்து ஆஸ்திரேலியா பிரதமர் பேசிய போது ’இந்திய பிரதமர் மோடி தான் எனது பாஸ் என்றும் ஒரு வருடத்திற்கு முன் நான் பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து நான் ஆறாவது முறையாக அவரை சந்தித்துள்ளேன் என்றும் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது என்பதை காட்டுகிறது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும் என்றும் இந்தியா உலக அளவில் பிரபலமான நாடாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Siva