கொரோனா வரும் முன்னே கண்டுபிடிக்கலாம்! – புதிய கருவி கண்டுபிடிப்பு!
ஒருவருக்கு கொரோனா இருப்பதை அறிகுறிகள் வரும் முன்னரே கண்டுபிடிக்கும் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 56 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு கொரோனா இருப்பது அவருக்கு அந்த அறிகுறிகள் உருவாகும் முன்னரே தெரிய வருவதில்லை. எனவே தனக்கு கொரோனா இல்லை என்ற எண்ணத்துடன் அவர் பலரிடமும் பழகும்போது மற்றவருக்கு அதன் தொற்று ஏற்படுகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையாக ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்படும் முன்னரே அவருக்கு தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய அர்ஜெண்டினா விஞ்ஞானிகள் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் 150 ரூபாய் செலவிலேயே கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும். இதன்மூலம் கொரோனா பரவுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக செயல்பட இது உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.