வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (11:20 IST)

தண்ணீர் கடவுள் நிஜம்தானா? பூமிக்கு அடியில் கிடந்த 21 கோபுரங்கள்!!

பெரு நாட்டில் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
பெருநாட்டின் கடலோர மாவட்டம் லாம்பேயிக்கியூ. இந்த இடத்தில்தான் 3,000 ஆண்டுகள் பழமையான பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  
 
சுமார் 131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோவிலில் பல புராதனப் பொருட்கள் கிடைத்துள்ளன. அதோடு, பண்டைய பெரு மக்கள் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த ஆலயத்திற்குள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சிந்தி இன மக்களும் ஜூலே லால் என்று கடல் தேவனை வணங்குவது மரபில் இருப்பதை போல இந்த ஆலயம் சிமு இனத்தவர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், தண்ணீர் கடவுளின் ஆதராகமாகவும் உள்ளது.