செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (16:19 IST)

ரஷ்ய தூதர் கொலையை தில்லாக படம்பிடித்த போட்டோகிராஃபர்

துருக்கிக்கான ரஷ்ய தூதர் படுகொலை செய்யப்பட்டதை, போட்டோகிராஃபர் ஒருவர் துணிச்சலாக படம்பிடித்துள்ளார்.



நன்றி: AP

 


துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவை, துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த, புகைப்பட கண்காட்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவ் கலந்து கொண்டார்.
 
அதில், அவர் பேச துவங்கியபோது துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் மரணமடைந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சம்பவம் நிகழ்ந்தபோது அங்கிருந்த அனைவரும் உறைந்து போய் நின்ற சமயத்தில், பிரஸ் போட்டோகிராஃபர் ஒருவர் சிறிதும் அஞ்சாமல் அந்த காட்சியை, தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் புகைப்படத்தை பதிவு செய்தவரின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.