திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (18:44 IST)

துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க கொலையாளி தலைமறைவு.. வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்கள்..!

அமெரிக்காவில் சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் 22 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் 60 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன் தினம் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளியை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்  20 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்தவர் என்பதால் அவரை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொலையாளி பிடிபடும் வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடந்த மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் இது என்று பத்திரிகைகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் துப்பாக்கி சூடு நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் கொலையாளியை பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியின் உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் வீடுகளை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  தலைமறைவாக இருக்கும் நபர் அபாயத்திற்கு உரியவர் என்பதால் மக்கள் யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva