செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:45 IST)

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்! ஜோ பைடன் திட்டவட்டம்!

அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதத்துக்குள் ஆப்கனில் இருந்து வெளியேறுவதில் உறுதியாக இருப்பதாக அமரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தாலிபன்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் அவர்கள் சொன்ன அளவுக்கான மக்களை இன்னும் வெளியேற்றவில்லை. இதனால் அமெரிக்க படைகள் வெளியேறுவதில் கால நீட்டிப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
 ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்காவுக்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கைவிடுத்தன.