1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (14:10 IST)

சிரியா மீது போர் தொடுக்கும் அமெரிக்கா?

சமீபத்தில் சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் சுமார் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
சிரியா அரசுபடைகள் மேற்கொண்ட ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வருமாறு பேசினார். 
 
சிரியா ரணுவம் மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ர கொடுமைகளை பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. இனி இந்த உலகில் இது போன்ற கொடுமைகளுக்கு இடம் இருக்க கூடாது. 
 
சிரியா ராணுவம் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக உடனடியாக ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும். இன்று இரவிற்குள் முடிவு எடுக்கப்பட்டு அது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
ஆனால், ரசாயன் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என சிரியாவும் ரஷ்யாவும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியற்கான ஆதரங்கள் எதையும் இதுவரை ராணுவம் கைப்பற்றவில்லை எனவும் ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது.