Daily Horoscope
✕

வேட்டையை துவங்கிய அமெரிக்க படை! சொன்னபடி செய்த பைடன்

Written By Sugapriya Prakash
Updated: சனி, 28 ஆகஸ்ட் 2021 (08:45 IST)
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது அமெரிக்கா. 
 
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதேபோல காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். தேடிவந்து வேட்டையாடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
சொன்னபடி தற்போது ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது அமெரிக்கா.  தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதால் காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

திமுக ஆட்சியில் கொள்முதல் செய்த போலி நூல்கள் அகற்றம்! பெட்டியில் வைத்து பாதுகாக்க உத்தரவு...

கோவை நூலக முறைகேடு தொடர்பாக ஸ்டாலின் பேசாதது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!

நாடு முழுதும் களைகட்டிய தீபாவளி திருநாள் கொண்டாட்டம்..புத்தாடை, இனிப்பு, பட்டாசு என மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்.. நூலக ஊழல் ஆதாரங்களை அள்ளி போட்ட அமைச்சர் ராஜ்மோகன்..

இந்திரா காந்தி செய்தது தவறுதான்: சுயசரிதை புத்தகத்தில் எழுதிய சோனியா காந்தி....!

அடுத்த கட்டுரையில்
Show comments