1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 மே 2020 (09:43 IST)

அமெரிக்காவில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,88,782 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,97,593 ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,57,425 ஆகவும் உயர்ந்துள்ளது. 
 
இதில் குறிப்பாக அமெரிக்காவை பார்க்கையில், அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 17,45,803 ஆக உயர்வு, வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,02,107ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333ஆக உயர்வு , கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692 ஆக உயர்வு, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக உயர்வு என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.