செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (12:36 IST)

இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா? ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்? பரபரப்பு தகவல்!

US air force

அமெரிக்காவின் குடியேற்ற முறையில் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள கடும் சட்டங்கள் காரணமாக இந்தியர்கள் ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் கடும் விதிகளை பின்பற்ற தொடங்கியுள்ளார். அதன்படி அமெரிக்காவில் உள்ள 18 ஆயிரம் குடியுரிமை இல்லாத இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கே திரும்ப அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக கொலம்பியாவை சேர்ந்த நபர்களை இப்படியாக ட்ரம்ப் அரசு விமானத்தில் ஏற்றி கொலம்பியாவிற்கே அனுப்பி வைத்தது. இந்நிலையில் தற்போது இந்தியர்களும் அவ்வாறு வெளியேற்றப்பட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியா அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ராய்டர்ஸ் பத்திரிக்கைக்கு அமெரிக்க விமானப்படை அதிகாரி தெரிவித்த தகவலில் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவ விமான இந்தியா புறப்பட்டுள்ளதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதவிர எங்கே எப்போது புறப்பட்டது? இந்தியாவிற்கு எப்போது வருகிறது? என்ற எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. எனினும் இந்த தகவல் வேகமாக பரவி வரும் நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K