வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (12:33 IST)

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் - அமெரிக்கா விலகல்

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்த திட்டங்களை, டிரம்ப் ஒடுக்குவதிலேயே முனைப்பு காட்டி வந்தார்.
 
அவ்வாறு ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த, கடந்த 2015-ம் ஆண்டு, ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அணுஆயுத திட்டங்களை, ஈரான் நிறுத்திக்கொண்டால் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குவதே ஒப்பந்தத்தின் மையமாகும்.
இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய அமெரிக்க அதிபரான டிரம்பிற்கு உடன்பாடில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.