திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By

அமேசான் சி இ ஓ பொறுப்பில் இருந்து விலகும் ஜெப் பீசோஸ்!

அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தின் சி இ ஓ பதவியில் இருந்து ஜெப் பீஸோஸ் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமேசான் நிறிவனம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி இ ஓ உலக பணக்காரர் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

இந்நிலையில் அவர் அமேசானின் சி இ ஓ பதவியில் இருந்து விலகி எக்சிகியூட்டிவ் சேர்மேன்  பதவியை ஏற்க உள்ளாராம். ஜெப் தற்போது இருக்கும் பதவிக்கு ஆன்டி ஜெஸி வருகிறார்.