புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (17:33 IST)

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

PM Modi
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படுகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது என்றும், அதன் இயல்பு மட்டுமே மாறுகிறது என்பதை வரலாறு காட்டுகிறது என்றும் பாரிஸில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.

அவர் மேலும் பேசிய போது, மனித குல வரலாற்றில் ஏஐ தொழில்நுட்பம் என்பது வித்தியாசமான முன்னேற்றம் என்றும், இதுவரை இல்லாத வேகத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில், இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் சரி செய்ய நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும், அதற்காக இந்த மாநாடு பயன் தரும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஜனநாயகப் படுத்த வேண்டும். அதேபோல், இணைய பாதுகாப்பு மற்றும் தவறான தகவல் பரப்புதல் தொடர்பான கவலைகளையும் தீர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஏஐ தொழில்நுட்பம் காரணமாக வேலை இழப்பு ஏற்படாது என்றும், அதன் இயல்பு மட்டுமே மாறும் என்றும் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பேசினார்.

Edited by Siva