புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : சனி, 25 மார்ச் 2017 (07:16 IST)

6 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்த எகிப்து அதிபர் விடுதலை

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த எகிப்து புரட்சியின்போது அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக் ஆட்சி அகற்றப்பட்ட்து. இந்த புரட்சியின்போது சுமார் 800 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாகவும், இதற்கு அதிபர் முபாரக்கே காரணம் என்று கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் அதிபர் ஹோஸ்னிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.



 




83 வயதில் சிறை வாழ்க்கையை தொடங்கிய ஹோஸ்னி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென அவரது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த திடீர் மாற்றம் எதனால் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளனர். ஹோஸ்னியை விடுதலை செய்தது மட்டுமின்றி எகிப்து முழுவதும் ஆங்காங்கே மன்னிப்பு கோரி பேரணியும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.