1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (11:42 IST)

ரசிகர் கொடுத்த ஐஸ்கீரீம்: மயங்கிய நடிகை

பாகிஸ்தானில் ரசிகர் கொடுத்த ஐஸ்கீரீமை சாப்பிட்ட நடிகை உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 

 

 
பாகிஸ்தானை சேர்ந்தவர் சானா பைசல் ஆப் தக் என்பவர் உருது சேனலில் குபியா என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் ஒருவன் அவரது ரசிகர் என்று கூறி சானாவிற்கு ஐஸ்கிரீம் கொடுத்துள்ளான்.
 
ஐஸ்கீரிமை சாப்பிட்ட சானா உடல் நலக்கோளாறு காரணமாக மயங்கிய நிலையில் ஷியாவுதீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். தற்போது அவரது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து கராச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பச்வம் காவல்துறையினர் கூறியதாவது:-
 
சானா  தனது கணவருடன் தெற்கு நிஜாமாபாத்தில் ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று உள்ளார். அப்போது 15 வயது சிறுவன் சந்தித்து தனது ஐஸ்கிரீமை கொடுத்து உள்ளான் அதன் பிறகுதான் அவர் உடல் நிலை பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர்.