1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (11:34 IST)

பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் சீனா

சீனாவில் உள்ள விலங்குகள் சுகாதார மையத்தில் பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 

 
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள விலங்குகள் சுகாதார மையம் ஒன்றில் நாய் மற்றும் பூனைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சினாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான அக்குபஞ்சர் மூலம் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல் நாய் மற்றும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மக்கள் அதிகளவில் தங்கள் செல்லப்பிராணிகளை அக்குபஞ்சர் சிகிச்சைக்கு அழைத்து செல்கின்றனர். இந்த சிகிச்சை 4 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு சுமார் 2 ஆயிரம் பூனை மற்றும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாம்.