வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (12:58 IST)

21 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்: ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்

ஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
கிழக்கு ஈராக்கை சேந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சமீபத்தில் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அந்த பெண்ணிற்கு  6 ஆண், 1 பெண் என 7 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்து குழந்தைகளும் நல்ல ஆராக்யத்துடன் இருக்கின்றன. அந்த பெண்ணும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது 7 குழந்தைகள் பிறந்துள்ளன.
 
 
ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்தது தான் முதல் சாதனை ஆகும்.