செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (14:33 IST)

1300 குழந்தைகளுக்கு ஒரு போஸ்ட்மேன் அப்பாவா: போர இடத்துல எல்லாம் என்ன வேல பாத்திருக்காரு!!

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் அதிகாரியை இரு இளைஞர்கள் சந்தித்து தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு முறையிட்டனர்.


 
 
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த இரு இளைஞர்களின் தந்தை ஒரே நபர் என்பது தெரியவந்தது.
 
இதன் பின்னர், 15 ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணையின் முடிவில் நாஷ்வில் பகுதியில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற தபால்காரர் இதே போல் 1,300 குழந்தைக்கு தந்தை என்ற திடுக்குடும் தகவல் வெளிவந்தது. டிஎன்ஏ சோதனை மூலமும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 1,300 குழந்தைகளுக்கு தந்தையானது குறித்து தபால்காரர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, அந்த காலத்தில் கருத்தடை என்பது பிரபலமாகவில்லை. 1960-களில் நான் பிரபல நடிகர் போன்று இருந்தேன். பெண்களை கவரும் வசீகரம் எனக்கு இருந்தது. இந்த விவகாரம் குறித்து நான் வெட்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.