ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2025 (20:04 IST)

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு போர் நிறுத்தத்தை கொண்டு வந்துள்ள நிலையில் பாலஸ்தீனர்களை அரபு நாடுகள் அழைத்துக் கொள்ள வேண்டும் என ட்ரம்ப் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போரில் தற்போது அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், போர் காரணமாக காசாவில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் திரும்பி வருகின்றனர். 
 

 

இந்நிலையில் தற்போதைய காசாவின் நிலை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் “காசா இப்போது பாதிக்கப்பட்ட இடமாக உள்ளது. காசாவை நாம்  முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அங்கே எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். எனவே நாம் சில அரபு நாடுகளுடன் இணைந்து அவர்களுக்கு வேறு இடத்தில் (வேறு நாட்டில்) வீடுகள் அமைத்து தருவதே சரியாக இருக்கும்” என பேசியுள்ளார்.

 

பாலஸ்தீனத்தின் எஞ்சியுள்ள மீத இடங்களையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் இஸ்ரேல் உள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த பேச்சு இஸ்ரேலின் திட்டத்திற்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விதமாக உள்ளதாக அரபு நாடுகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K