வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (11:30 IST)

போட்டோ மோகம் - முதியவரை கடித்து கொன்ற நீர்யானை

கென்யாவில் வனவிலங்குகள் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணி ஒருவரை நீர்யானை கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் நீர்யானைகள் உள்ளது. இந்த சரணாலயத்தை பார்க்க உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
 
இந்நிலையில் சங் மிங் சாங் (66) என்பவர் அந்த சரணாலயத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளை படம்பிடித்தார். அப்போது அங்கிருந்த நீர் யானைகளை போட்டோ எடுத்தார். அப்போது கால் தவறி நீர்யானைகள் இருந்த குளத்துக்குள் விழுந்து விட்டார்.
 
குளத்தில் விழுந்த அவரை நீர்யானை கடித்து குதறியது. மார்பில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார்.