செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (17:48 IST)

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய ஒளிப்பிழம்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய பிரகாசமான ஒளிப்பிழம்பு காரணமாக அந்த பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.
 
கடந்த ஒரு ஆண்டாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் கீவ் என்ற நகரின் வான் பரப்பில் திடீரென பிரகாசமான ஒளி பிழம்பு தோன்றியது 
 
மேலும் மக்களை எச்சரிக்கும் வகையில் விமான தாக்குதலுக்கான சைரன்களும் ஒலிக்கப்பட்டதால் பொதுமக்கள் பதட்டம் அடைந்தனர். இருப்பினும் எந்த ஒரு தாக்குதலும் தலைநகரில் நடத்தப்படவில்லை என்று ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
நாசாவின் செயல் இழந்த செயற்கைக்கோள் அல்லது விண்கல் வான் பரப்பில் எரிந்து விழுந்ததால் இந்த ஒளிப்பிழம்பு தோன்றி இருக்கலாம் என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva