செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (18:35 IST)

அழகுப் போட்டியில் நடைபெற்ற அடிதடி: அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

beauty
அழகுப் போட்டியில் நடைபெற்ற அடிதடி: அதிர்ச்சியில் பார்வையாளர்கள்
அழகு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இரு பிரிவினருக்கு இடையே அடிதடி மோதல் ஏற்பட்டதால் பார்வையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
நியூயார்க் நகரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இலங்கை அழகுப் போட்டி நடைபெற்றது. இலங்கை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சவுத் பீச் என்ற பகுதியில் இந்த போட்டி நடைபெற்றது 
 
இலங்கை மருத்துவமனை ஒன்றுக்கு பணம் திரட்டும் முயற்சியில் இந்த அழகு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அழகு போட்டியில் ஏஞ்சலியா குணசேகரா என்பவர் மிஸ் இலங்கை பட்டம் வென்றார். 
 
இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran