பிரேசிலில் பெண் ஒருவருக்கு 7.3 கிலோ எடையில் பிறந்த குழந்தை
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 7.3 கிலோ எடையில் குழந்தை பிறந்துள்ளது.
பொதுவாக பிறக்கும் குழந்தையின் எடை 3 கிலோவில் இருக்கும்.. 5கிலோ எடைவில் பிறந்தாலே அதிக அடையில் இருப்பதாகக் கூறுவர்.
இந்த நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த க்ளெடியோன் சாண்டோஸ் என்ற கர்ப்பிணிக்கு, பாரிண்டின்ஸ் பகுதியில் உள்ள பார்ட்டே கொலம்போ மருத்துவமனையில் 7.2 கிலோ எடையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1955 ஆம் ஆண்டு 10.2கிலோ எடையில் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்ததே அதிக எடையாகப் பார்க்கப்படுகிறது.