செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (10:32 IST)

அமெரிக்க தேர்தல்…. முன் கூட்டியே வாக்களித்த 9.5 கோடி பேர்!

அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 9.5 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ஆரம்பம் முதலே அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொரோனா ஒரு சாதாரண காய்ச்சல் என்ற அளவிலேயே பேசி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் கடந்த மாதம் முதலாக தீவிரமாக நடந்து முடிந்துள்ளது.

அமெரிக்காவில் வாக்காளர்கள் முன் கூட்டியே வாக்களிக்க அனுமதி உண்டு. அதன்படி இன்று நடக்கும் தேர்தலில் முன் கூட்டியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரத்து 832  பேராக உள்ளது. கொரோனா பரவல் அபாயம் காரணமாகவே இத்தனைப் பேர் முன் கூட்டியே வாக்களித்துள்ளதாக சொல்லப்படுகிறது.