1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (21:13 IST)

3 பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்து... 80 மாணவர்கள் உள்பட 80 பேர் காயம்

accident
தென்கொரியாவில் உள்ள சியோலில் கிழக்கேயுள்ள நெடுஞ்சாலையில் இன்று 3 பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்தில் சிக்கியது. இதில், மாணவர்கள் உள்பட 80 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்கொரியா நாட்டின் சியோலின் கிழக்கேயுள்ள நெடுஞ்சாலையில்  இன்று 3 பள்ளிப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதிஉ விபத்தில் சிக்கியது.

இந்த விபத்து தீயணைப்புத் தலைமையகத்தின் அதிகாரி கூறியதாவது:

பள்ளிப் பேருந்துகளில் 75 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடைபெற்றதாக கூறினார்.

இவ்விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் படையினர் விபத்திற்குள்ளான பேருந்துகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்களை மீட்டனர்.

மேலும், இந்த விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.