1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2016 (10:07 IST)

மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம் ஏற்படுத்திய விபத்து: 75 பேர் பலி

பிரான்ஸ் நாட்டின் நைஸ் மாகாணத்தில், அந்நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தின் போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் 80 பேர் மரணம்.


 

 
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு நேற்று இரவு நைஸ் மாகாணத்தில் சிறப்பு வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.  
 
அப்போது திடீரென்று ஒரு லாரி மக்கள் இருக்கும் பகுதியை நோக்கி வந்துள்ளது. சுமார் 2 கி.மீ தூரம் சாலையோரமாக அந்த லாரி சென்றதில், அந்த பகுதியில் நின்ற அனைத்து மக்களும் அலரி அடித்து ஓடத் தொடங்கினர். 
 
அந்த விபத்தில் நசுங்கி 80 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். 
 
மேலும் இச்சம்பவம் பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தீவிரவாத அமைப்புகளின் செயல் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.