1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (22:33 IST)

தலைக்கு ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதி மெஹ்முத் தலைக்கு ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாகிஸ்தான் நாட்டில் ஆஷிப் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, வடமேற்குப் பகுதியில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ தலிபான்களின் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக போலீஸார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும்  நிலையில் நேற்று கைபர் பக்துங்வாவில் உள்ள மர்தான் மாவட்டத்தில்,   நவம்பர் 10 ஆம் தேதி இரவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போலீஸார் களமிறங்கினர்.

இதைப்பார்த்த பயங்கரவாதிகள் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போலீஸார் நடத்திய இத்தாக்குதலில்,கைபர் பக்துங்வா மாகாண அரசு பயங்கரவாதி மெஹ்மூத்(எ) ஒபைத் தலைக்கு ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj