1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (11:24 IST)

வீரியமிக்க டெல்டா வகை வைரஸால் இங்கிலாந்தில் 3வது அலை!

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாக பரவி வந்த டெல்டா வகை வைரஸ் இங்கிலாந்தில் 3வது அலையை ஏற்படுத்தியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.   
 
இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாக பரவி வந்த டெல்டா வகை வைரஸ் இங்கிலாந்தில் 3வது அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிக வீரியமிக்கது. 
 
தற்போது இந்த வைரசால் இங்கிலாந்தில் மூன்றாவது அலை உருவாகி இருக்கிறது. இந்த நாட்டில் முதல் மற்றும் 2வது அலை ஓய்ந்து கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது டெல்டா வைரசால் 4 மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் 70 நாடுகளில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது கூடுதல் தகவல்.