3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு தோட்டம் கண்டுபிடிப்பு
கனடா நாட்டில் நீருக்கடியில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு தோட்டம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கனடா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் பசிபிக் கடலோரப் பகுதியை ஒட்டி நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டும் பணியின் போது, கடலோரமாக மிகப்பெரிய உருளைக்கிழங்கு குவிந்து இருப்பதை கண்டறிந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த இடத்தில் உருளைக்கிழங்கு தோட்டம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்தனர்.
மேலும் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் கடல் நீர் சூழ்ந்திருந்ததால், அழியாமல் அப்படியே இருந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசித்துவந்த கட்ஸி பழங்குடியின மக்கள், இந்த உருளைக்கிழங்கு தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த உருளைக்கிழங்கு இந்தியாவில் பயிரிடப்படும் இனத்தைச் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.