1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By dinesh
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (14:22 IST)

12 மணிநேர போராட்டம்: ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

வங்காள தேசம் டாக்கா நகரில் உள்ள ஒரு உணவகத்தை நேற்று இரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கமாண்டோக்கள் அந்த 6 தீவிரவாதிகளை சுட்டு 13 பிணைக்கைதிகளை காயங்களுடன் மீட்டுள்ளனர். மேலும் ஒரு தீவிரவாதியை உயிருடம் பிடித்துள்ளனர்.


இதில் 11 வெளிநாட்டினரையும், 20 வங்காள நாட்டை சேர்ந்தவர்களையும் ஐ.எஸ் தீவிரவாகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலை பற்றி வங்காள நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில் “தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, தீவிரவாதமே அவர்களின் மதம்” என்றார்.