Daily Horoscope
✕

வெண்டை மொச்சை மண்டி

வெண்டை மொச்சை மண்டி

Written By Sasikala
Updated: புதன், 13 ஜூலை 2016 (13:33 IST)
தேவையான பொருட்கள்:
 
வெண்டைக்காய் - அரை கிலோ
தக்காளி - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 3
காய்ந்த மிளகாய் - 3 (அல்லது காய்ந்தது)
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 3 பல்
மொச்சைப் பயறு - 50 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
வெண்டைக்காயை கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். மொச்சைப் பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் போட்டு வேகவிடவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். 
 
புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். வெண்டைக்காய் பாதியளவு வெந்ததும் மொச்சைப் பயறைச் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
 
சுவை மிகுந்த வெண்டை மொச்சை மண்டி தயார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments