செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (18:21 IST)

கார்லிக் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
 
அரிசி - 300 கிராம்
பூண்டு - 10 பல் 
வெங்காயத்தாள் - 2 
கேரட் - 2 
குடை மிளகாய் - 1 
எண்ணெய் - தேவையான அளவு 
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி 
வினிகர் - 1 தேக்கரண்டி 
மிளகு தூள் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:
 
1. அரிசியை கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அரிசியை முக்கால் பாகம் தண்ணீரில் வேகவிடவும். 
 
2. கேரட், குடை மிளகாய், வெங்காய தாள், பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
 
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 
 
4. பின்னர் நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும். 
 
5. பதி வதங்கியதும் வேகவைத்த அரிசி, வெங்காய தாள், சோயா சாஸ், வினிகர், மிளகு தூள் இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கலரவும். இவ்வாறு செய்தால் சுவையான கார்லிக் ப்ரைட் ரைஸ் ரெடி.