Daily Horoscope
✕

சூப்பரான உருளைக்கிழங்கு மசால் தோசை செய்ய !!

Written By Sasikala
Updated: புதன், 17 பிப்ரவரி 2021 (17:30 IST)
 
மசாலா செய்ய:
 
உருளைக்கிழங்கு - 250 கிராம்,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 4,
இஞ்சி - ஒரு துண்டு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
உப்பு - சுவைக்கு ஏற்ப
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

செய்முறை:
 
வெங்காய், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
 
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.  அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி கிளறி இறக்கவும். மசால் ரெடி.
 
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சுற்றி சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி  வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மட்த்து எடுத்து பரிமாறவும். சூப்பரான  உருளைக்கிழங்கு மசால் தோசை தயார். இதனுடன் சேர்த்து சாப்பிட தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments