செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (14:23 IST)

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்ய !!

Potato cheese balls
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1/2 கப் (துருவியது)
சீஸ்  - 1/2 கப் (துருவியது)
கார்ன் - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைக்கேற்ப
ப்ரெட் தூள் - தேவைக்கேற்ப



செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.

இந்த உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும். உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார். தக்காள் சாஸ் உடன் பரிமாற சுவையாக இருக்கும்.