Daily Horoscope
✕

சுவையான ஸ்டப்டு புடலங்காய் செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 18 மே 2021 (18:09 IST)
பெரிய உருளைக்கிழங்கு - 1
பீன்ஸ் - 10
கேரட் - 1
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
தனியா தூள் - 1/2 டீஸ்பூன் 
காரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
புடலங்காயை எடுத்து, இரு ஓரங்களை நறுக்கிவிட்டு, நடுப்பகுதியை, வட்டமாக நறுக்கி, அதனுள் இருக்கும் சதைப்பகுதியை நீக்கிவிடவும்.மேலே சொன்ன எல்லா பொருட்களும் தயாராக வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைக்கவும். கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி ஆவியில்  வேகவைக்கவும்.
 
ஒரு பௌல் எடுத்து, உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், எல்லா மசாலாகள், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து, தயாராக வைத்துள்ள புடலங்காய் ரிங்ஸில், வைத்து அழுத்தி, பிரட் தூளில் நன்கு பிரட்டி, இருபக்கமும் நன்கு அழுத்தி வைக்கவும்.
 
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், ஒவ்வொரு ஸ்டப்டு புடலங்காய் ரிங்ஸ்சை சேர்த்து, இருபக்கமும் நன்கு பொரித்து எடுக்கவும். ஸ்டப்டு புடலங்காய் இப்போது மிளகுக்காரத்துடன் தயார்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments