சுவையான வெங்காய போண்டா செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2 
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 
சோம்பு  - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மைதா மாவு - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
 
வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், மைதா மாவு உப்பு வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்
 
மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை நன்கு காய வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகவைத்து எடுக்கவும். சுவையான வெங்காய போண்டா தயார்.

எல்லாம் காட்டு

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments