பச்சரிசி முறுக்கு செய்ய....!
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 4 கப்
உளுந்து - 1/4 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை கழுவி (ஊற வைக்கக்கூடாது) நன்றாக காய வைக்கவேண்டும். உளுந்து, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
காய்ந்த பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு மூன்றையும் சேர்த்து மாவுமெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முருக்குமாவு, வெண்ணெய், எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பக்குவமாக பிசைந்து, முருக்கு குழாயில் இட்டு பிழிந்து எடுக்கவும். இந்த முருக்கு நல்ல மொறுமொறுப்புடன் ருசியாக இருக்கும்.