காளான் மஞ்சூரியன் செய்ய...!

Updated: சனி, 22 செப்டம்பர் 2018 (16:34 IST)
சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிது
பொரிப்பதற்கு எண்ணெய் - 100 மில்லி
                                 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி 
சீரகம் - 1/2 தேக்கரண்டி 
பெரிய வெங்காயம் - 1
 
                           
செய்முறை:
 
முதலில் காளானை தண்ணீரில் அலசி, மெல்லிய காட்டன் துணியை வைத்து துடைத்தால் காளான் நல்ல வெண்மையாக மாறிவிடும். சுத்தப்படுத்திய காளான், வெங்காயம், பூண்டு மூன்றையும் நறுக்கி வைக்கவும். 
 
மைதாமாவு, அரிசிமாவு, கார்ன் ப்ளோர் மாவு மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காளான் துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள  பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
                                                                
வெங்காயம் பொன்னிறமானதும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு 1 நிமிடம் கிளறவும். பின்னர் அதனுடன் புட் கலர், சோயாசாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து எல்லாம் சேரும் வரை நன்றாக கிளறவும். பொரித்து வைத்துள்ள காளானில் உப்பு சேர்த்திருப்பதால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 
கடைசியாக பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் மஞ்சூரியன் தயார்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments