மாங்காய் சாதம் எப்படி செய்வது...?

தேவையான பொருட்கள்:
 
சாதம் - 2 கப்,
துருவிய மாங்காய் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை -1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
 
மாங்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். அரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து சாதமாக, உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். பின்பு 1  டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து ஆற விடவும். 
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளிக்கவும். சிவந்து வந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, மாங்காய்த் துருவல், தேங்காய்த் துருவலை சேர்த்து லேசாக வதக்கி உப்பு சேர்த்து  இறக்கவும். இத்துடன் சாதம், வேர்க்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
 
குறிப்பு: சாதம் மஞ்சள் நிறத்தில் வேண்டுமென்றால் வதக்கும் பொழுது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். மாங்காயை குழைய வதக்கக் கூடாது.

எல்லாம் காட்டு

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments