Daily Horoscope
✕

சுவை மிகுந்த வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: புதன், 4 மே 2022 (19:08 IST)
தேவையான பொருட்கள்:

தயிர்- 2 கப்
உப்பு - 1 தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெண்டைக்காய் - 5

அரைக்க தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சரிசி - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 அங்குலம்
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 1/2 மேஜைக்கரண்டி துருவியது



செய்முறை:

அரிசி, பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து, அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். தயிரை சம அளவு நீர் சேர்த்து மோராக்கிக்கொள்ளவும்.

வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும். வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்க வேண்டும். நன்கு வதங்கி வரும்போது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து, அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, பிறகு அடித்து வைத்துள்ள தயிரை சேர்க்க வேண்டும். சிறிது தண்ணீரும் சேர்க்க வேண்டும். கொதிக்கவிடாமல் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவை மிகுந்த வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.

எல்லாம் காட்டு

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments