Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான சுலபமான ரவா தோசை செய்ய...!!

Written By Sasikala
Updated: வியாழன், 26 நவம்பர் 2020 (15:49 IST)
மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு (பொடி)
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு (பொடி)
பச்சை மிளகாய் - 5 (பொடி)
முந்திரி - 15

செய்முறை :
 
கொத்தமல்லி, முந்திரி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன்  மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். 
 
மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
 
தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாக சூடானதும் கரண்டியால் ரவாதோசை  மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.
 
சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். முறுவலாக வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும். சூப்பரான சுவையான ரவா தோசை தயார்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments