Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சால்னா தெரியுமா...? அதை செய்ய தெரியுமா...?

Written By Sasikala
Updated: திங்கள், 12 ஜூன் 2017 (14:01 IST)
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிது
                               
வறுத்து அரைக்க: மிளகாய் வத்தல் - 2, கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி, பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி, மிளகு - 1/2 தேக்கரண்டி, பட்டை - 2 , கிராம்பு - 1.
                                              
அரைக்க தேவையான பொருள்கள்: தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி,  பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி,  முந்திரிப்பருப்பு - 4, கசகசா - 1/2 தேக்கரண்டி.
                       
தாளிக்க தேவையான பொருள்கள்:
 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
பட்டை - 1/4 இன்ச் அளவு 
கிராம்பு - 1
வெங்காயம் - 1/4 பங்கு 
கறிவேப்பிலை - சிறிது

 
செய்முறை:
 
கடாய் சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு எல்லாவற்றையும் போட்டு வறுத்து  ஆறிய பின் மிக்ஸ்சியில் பொடித்து கொள்ளவும். அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கி ஆறிய பின் மிக்ஸ்சியில் கொஞ்சம் கரகரப்பாக  அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பு, கசகசா எல்லாவற்றையும்  மிக்ஸ்சியில்  அரைத்துக் கொள்ளவும்.
                                 
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும்  கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, பொடி செய்து வைத்துள்ள மசாலா பொடி, உப்பு, சிக்கன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து அதோடு ஒரு கப் தண்ணீர்  ஊற்றி கொதிக்க விடவும்.
      
பிறகு வெங்காய விழுது, அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான சால்னா ரெடி. இவை பரோட்டா, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக  இருக்கும்.

எல்லாம் காட்டு

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments