சுவை மிகுந்த புடலங்காய் வறுவல் செய்ய...!!
தேவையான பொருட்கள்:
புடலைங்காய் - 400 கிராம்
கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி
சோள மாவு - 2 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
புடலங்காயின் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் வெள்ளையான பகுதியை எடுத்து விட்டு நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பிறகு அதன் மேல் கடலை மாவு, சோளமாவு, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வெட்டி வைத்துள்ள புடலைங்காய் துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
மீதமுள்ள எல்லா புடலைங்காய் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். கடாயில் உள்ள அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து வறுத்து வைத்துள்ள புடலைங்காயின் மேல் தூவி விடவும். சுவையான புடலங்காய் வறுவல் தயார்.