புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வாஸ்து: படுக்கையறை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா...?

படுக்கையறை:நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.

படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.  
 
ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு. வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.
 
படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும்.  எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது,  அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.
 
மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும். படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ்  வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.
 
படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி  வைக்கலாம்.  வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.