திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

வாஸ்துப்படி கடைப்பிடிக்க வேண்டிய சில பயனுள்ள குறிப்புகள்...!!

தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் ஆனால் அவ்வீட்டில் இருப்பவரை லட்சாதிபதியாக்கி விடும். நீண்ட ஆயுள், சந்தானம் விருத்தி ஏற்படும்.
எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது.
 
தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.
 
தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளிபடியுமிடமான முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடுதல் நல்லது.
 
வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும் இருப்பது மிக மிக நல்லது.
 
வீட்டு எஜமானன் நீடித்த ஆயுளோடு இருக்க மனைப் பொருத்தத்தில் சூத்திரத்திப் பொருத்தத்தில் மரண சூத்திரம் வரக்கூடாது.
 
மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும்.  கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும். இருந்தால், ஏழையாக்கி விடும். தரித்திரம் ஏற்படும். வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத்  தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும். தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.
 
ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.   அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.  வாயு மூலை  மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும். கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.
 
கிழக்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி  விடும்.
 
அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயுமூலையும், வடக்கும் பள்ளமாகவும் இருந்தால் பல வகை இலாபங்கள் ஏற்படும்.