கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத மந்திரம்...!
வாஸ்து நன்றாக இருப்பது பண வருமானத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஒருவர் நிறைய சம்பாதித்தும் நோயினால் பாதிக்கப்பட்டு அந்த பணத்தை மருத்துவமனைக்கு கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.
சிலர் சரிவர வாஸ்து பார்க்காமல் அவசரமாக வீட்டை கட்டிவிட்டு பின்பு வாஸ்து அவசரமாக அவதிப்படுவது வழக்கம். கடனை உடனை வாங்கி கட்டிய வீட்டின் சுவர்களை சிலர் வாஸ்து பிரச்சனைக்காக மாற்றி அமைக்கவும் செய்கின்றனர். ஆனால் வாஸ்து தோஷங்களை போக்க சில மந்திரங்களும் இருக்க தான் செய்கிறது. அதில் ஒரு மந்திரம் தான் வாஸ்து குறை நீக்கும் மந்திரம்.
வாஸ்து மந்திரம்: ஓம் வாஸ்து புருஷாய நம: ஓம் ரத்தலோசனாய நம: ஓம் க்ருஷ்யாங்காய நம: ஓம் மஹா காயாய நம:
இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதன் பலனாக வீட்டில் உள்ள எதிர் மறை சக்திகள் சிறிது சிறிதாக குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இந்த மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
இந்த மந்திரத்தை தினமும் குறைந்தது 12 முறையாவது ஜபிப்பது சிறந்தது. வீட்டில் இருக்கும் வாஸ்து தோசமானது ஓரளவிற்காவது நீங்க இந்த மந்திரத்தை குறைந்தது 54,0000 முறையாவது ஜெபித்திருக்க வேண்டும்.