செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:32 IST)

வாஸ்து சாஸ்திரத்தின்படி மனையின் உச்ச நீச்சம் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் ஒரு மனை அல்லது வீட்டுக்கு உச்சம் மற்றும் நீச்ச பாகங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது, மனை அல்லது வீட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதியை இரண்டு பகுதிகளாக பிரித்தால், அவற்றில் ஒரு பாகம் உச்சமாகவும், மற்றொரு பாகம் நீச்சமாகவும் அமைகிறது. 

பொதுவாக, கட்டமைப்புகளில் உச்சம் மற்றும் நீச்ச பகுதிகளை கச்சிதமாக அமைத்துக்கொண்டால், வாழ்க்கை நல்லவிதமாக அமையும் என்று வாஸ்து நிபுணர்களின் கருத்தாகும்.
 
வீடு அல்லது மனைக்கு கிழக்கு திசையின் மையத்தில் இருந்து வடக்கு பாகம் உச்சம் என்றும், தெற்கு பக்கம் நீச்சம் என்றும் கணக்கிடப்படுகிறது.
மேற்கு திசையின் மையத்தில் இருந்து வடக்கு பாகம் உச்சம் என்றும், தெற்கு பாகம் நீச்சம் என்றும் குறிக்கப்படும்.
வடக்கு திசையின் மையத்தில் இருந்து கிழக்கு பாகம் உச்சம் என்றும், மேற்கு பாகம் நீச்சம் என்றும் கணக்கிடப்படும்.
தெற்கு திசையின் மையத்தில் இருந்து கிழக்கு பாகம் உச்சம் என்றும், மேற்கு பாகம் நீச்சம் என்றும் கணக்கிடப்படுகிறது.
 
வடகிழக்கு என்ற ஈசானிய பகுதியின் கிழக்கு பாகம் கிழக்கு ஈசான்யம் என்றும் அதன் வடக்கு பகுதி வட ஈசானியம் என்றும் சொல்லப்படும்.
தென்கிழக்கு என்ற ஆக்கினேய பாகத்தின் கிழக்கு பக்கம் கிழக்கு ஆக்கினேயம் என்றும், தெற்கு பக்கம் தெற்கு ஆக்கினேயம் என்றும் குறிப்பிடப்படும்.
வடமேற்கு என்ற வாயவிய பகுதியின் மேற்கு பக்கம் மேற்கு வாயவியம் என்றும் வடக்கு பக்கம் வடக்கு வாயவியம் என்றும் சொல்லப்படும்.
தென்மேற்கு என்ற நைருதி பாகத்தின் மேற்கு பக்கம் மேற்கு நைருதி என்றும், தெற்கு பக்கம் தெற்கு நைருதி என்றும் குறிப்பிடப்படும்.
இதில், கிழக்கு-வடக்கு ஈசானிய பகுதிகள், தெற்கு ஆக்கினேயம் மற்றும் வடக்கு வாயவியம் ஆகிய நான்கு பகுதிகளும் உச்சம் என்றும், மேற்கு-தெற்கு நைருதி பகுதிகள், கிழக்கு ஆக்கினேயம் மற்றும் வடக்கு வாயவியம் ஆகிய நான்கு பகுதிகளும் நீச்சம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன.