Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!

Updated: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (16:05 IST)
 
சிறிது தனியாவையும், காயவைத்த 2 மிளகாயையும் எண்ணெயில் விட்டு வறுத்துப் பொடி செய்துகொண்டு, கலந்து வைத்திருக்கும்  எலுமிச்சம்பழச் சாதத்தில் தூவிக் கிளறினால், தனியா பொடி ஊறி எலுமிச்சை சாதம் ருசி அபாரமாக இருப்பதுடன், வித்தியாசமாகவும்  கலராகவும் இருக்கும்.
 
சாதம் மீந்துவிட்டால் அதனுடன் ஜவ்வரிசியை வெந்நீரில் ஊறவைத்து, பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு அரைத்து, குக்கரில்  வைத்து நான்கு விசில் வந்தவுடன் இறக்கி, சாதத்தில் கொட்டிக் கலந்து பிளாஸ்டிக் பேப்பரில் கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து  எடுத்தால் சூப்பரான வத்தல் தயார்.
 
புளிக்காய்ச்சல் தயாரித்துக்கொண்டு புளிசாதம் கிளறுவதற்கு முன், சூடான சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும். சிறிது  மிளகு, வெந்தயம், சீரகம், கடலைப் பருப்பு ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, புளிக்காய்ச்சலுடன் அந்தப் பொடியையும்  தேவையான அளவுக்கு தூவி கிளறினால், கோயில் பிரசாதம் போல் அருமையாக இருக்கும்.
 
சாதம் சமைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்தால், பருக்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் தனித்தனியாக  இருக்கும்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments